Sunday, June 28, 2026
https://thaaitv.com/
Homeஇலங்கை11 இந்திய மீனவர்கள் கடற்படையினரால் இன்று அதிகாலை கைது

11 இந்திய மீனவர்கள் கடற்படையினரால் இன்று அதிகாலை கைது

இலங்கை கடற்பரப்பில் மீன் பிடித்த குற்றச்சாட்டில் 11 இந்திய மீனவர்கள்
கடற்படையினரால் இன்று அதிகாலை கைது செய்யப்பட்டனர்.

யாழ்ப்பாணம் நெடுந்தீவு கடற்பரப்பில் மீன்பிடித்துக் கொண்டிருந்த ஒரு படகையும்
அதிலிருந்த 11 இந்திய மீனவர்களையும் அத்துமீறி எல்லைக்குள் மீன் பிடித்ததாக
கடற்படையினர் கைது செய்தனர்.

கைதான மீனவர்கள் மயிலிட்டி மீன்பிடி துறைமுகத்திற்கு அழைத்துச்
செல்லப்படுவதுடன்இ கைதானவர்களை கடற்றொழில் நீரியல்வளத்துறை
திணைக்களத்தினரிடம் ஒப்படைத்து ஊர்காவற்றுறை நீதிமன்றத்தில்
முற்படுத்த நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments