Monday, June 29, 2026
https://thaaitv.com/
Homeஇலங்கைஊழல்வாதிகளுக்குத் தண்டனை வழங்கும் செயற்பாடு ஒருபோதும் நிறுத்தப்படாது-ஜனாதிபதி

ஊழல்வாதிகளுக்குத் தண்டனை வழங்கும் செயற்பாடு ஒருபோதும் நிறுத்தப்படாது-ஜனாதிபதி

ஊழல்வாதிகளுக்குத் தண்டனை வழங்கும் செயற்பாடு ஒருபோதும் நிறுத்தப்படாது என ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க தெரிவித்துள்ளார்.

பெலியத்த பகுதியில் மக்கள் சந்திப்பொன்றில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே ஜனாதிபதி இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

மக்களுக்காகச் சேவை செய்யாத பல அரசியல்வாதிகள் இன்று தோல்வியைத்
தழுவியுள்ளனர். எந்தவகையில் சதிகளும்,  முயற்சிகளும் முன்னெடுக்கப்பட்டாலும் தற்போது ஊழல் வாதிகளுக்கு எதிராக முன்னெடுக்கப்படும் நடவடிக்கைகள் ஒருபோதும் நிறுத்தப்பட மாட்டாது.

பலருக்கு எதிராக தற்போது குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில்,  சர்ச்சைக்குரிய பல சம்பவங்கள் தொடர்பில் ஓரிரு மாதங்களில்
வழக்கு தொடரப்படவுள்ளது. அதேநேரம்இ இன்று பல வழக்கு விசாரணைகளிலிருந்து
நீதிபதிகள் விலகுகின்றனர்.

இது சிறந்த சைகை அல்ல. நீதிபதிகள் தங்களுக்கு ஒப்படைக்கப்பட்டுள்ள
பொறுப்பிலிருந்து விலகக் கூடாது. பொலிஸ்மா அதிபர் ஒருவர் கைதாவார் என
வரலாற்றில் எவரும் எதிர்பார்த்திருக்க மாட்டார்கள். தற்போது அது நடந்துள்ளது.

கடந்த காலங்களில் பொலிஸ்மா அதிபர்கள் கைதாகாமல் இருந்தமைக்கு அவர்களின்
நேர்மையே காரணம் என கூறமுடியாது.

எனவேஇ பதவி பேதமின்றி எதிர்காலத்தில் மேலும் பலருக்கு எதிராக நடவடிக்கை
எடுக்கப்படவுள்ளது.

அத்துடன்,  அரசியல்வாதிகளுக்காக பணியாற்றிய பல அரச அதிகாரிகளுக்கு எதிராக எதிர்காலத்தில் விசாரணைகளில் இடம்பெறும் எனவும் ஜனாதிபதி
அனுரகுமார திசாநாயக்க தெரிவித்துள்ளார்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments