Monday, June 29, 2026
https://thaaitv.com/
Homeஇலங்கைஜனாதிபதி அநுரவுக்கு நன்றி தெரிவித்த மோடி

ஜனாதிபதி அநுரவுக்கு நன்றி தெரிவித்த மோடி

ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவின் அழைப்பை ஏற்று இலங்கைக்கு வருகை தந்த பிரதமர் நரேந்திர மோடி அநுராதபுரத்திலிருந்து இராமேஸ்வரம்
நோக்கி புறப்பட்டார்.

இந்நிலையில்,  தனது வருகை குறித்து எக்ஸ் பக்கத்தில் இவ்வாறு பதிவிட்டுள்ளார்.

எனது வருகையின் போது அளித்த அன்பிற்காக ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க
மற்றும் இலங்கை மக்களுக்கு எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

கொழும்பாக இருந்தாலும் சரி,  அநுராதபுரமாக இருந்தாலும் சரி,  இந்தப் பயணம்
நமது இரு நாடுகளுக்கும் இடையிலான ஆழமான கலாசார,  ஆன்மீக மற்றும் நாகரிக
உறவுகளை மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளது.

இது நமது இருதரப்பு உறவுகளுக்கு நிச்சயமாக உத்வேகத்தை அளிக்கும் என
இந்தியப் பிரதமர் தெரிவித்துள்ளார்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments