Saturday, June 27, 2026
https://thaaitv.com/
Homeஆன்மிகம்யாழ்ப்பாணம் வந்தடைந்த தருமபுரம் ஆதீனம்

யாழ்ப்பாணம் வந்தடைந்த தருமபுரம் ஆதீனம்

வரலாற்று பிரசித்தி பெற்ற மாவிட்டபுரம் கந்தசாமி ஆலயத்தின் மகா கும்பாபிஷேக
பெருவிழாவில் கலந்து கொள்வதற்காக இந்தியாவின் தருமபுரம் ஆதீனம்,  ஶ்ரீலஶ்ரீ
27வது குருமகா சந்நிதானம் மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாசாரிய சுவாமிகள், இன்று பலாலி விமான நிலையம் ஊடாக யாழ்ப்பாணம் வந்தடைந்தார்.

அவருக்கு விமான நிலையத்தில் மகத்தான வரவேற்பு அளிக்கப்பட்டது.

மாவை ஆதீனம் சார்பில்,  அச்சுவேலி சிவாகம கலாநிதி சிவஸ்ரீ கு.வை.க.
வைத்தீஸ்வர குருக்கள் பூரண கும்ப மரியாதையுடன் தருமபுரம் ஆதீனத்தை
வரவேற்றார்.

அதனைத் தொடர்ந்து, நல்லூர் வடக்கு ஸ்ரீ சந்திரசேகர பிள்ளையார் கோவில்
பிரதம சிவாச்சாரியார் சிவஸ்ரீ முத்து ஸ்ரீநீவாக குருக்கள், திருநெல்வேலி நீலாயாதாட்சி சமேத காயாரோகேணேஸ்வரர் தேவஸ்தான சிவஸ்ரீ சதா சிவகுமார் குருக்கள், பிரம்மஸ்ரீ சிவ ஆனந்த கிருஷ்ண சர்மா ஆகியோர் மாலை அணிவித்து ஆதீனத்தை வரவேற்றனர்.

பின்னர், திருக்கேதீஸ்வரம் மற்றும் நல்லூர் வடக்கு ஸ்ரீ சந்திரசேகர பிள்ளையார் கோவில் ஆலய அறங்காவலர்கள்,  இலண்டன் கனகதுர்க்கை அம்மன் ஆலய இணை ஸ்தாபகர் கலாநிதி அப்பையா தேவசகாயம் ஆகியோர் பொன்னாடை போர்த்தி ஆதீனத்தை மரியாதை செய்து வரவேற்றனர்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments