Saturday, August 15, 2026
https://thaaitv.com/
Homeஇலங்கையாழில் காய்ச்சலால் பாதிக்கப்பட்ட குடும்பஸ்தர் உயிரிழப்பு

யாழில் காய்ச்சலால் பாதிக்கப்பட்ட குடும்பஸ்தர் உயிரிழப்பு

நிமோனியா காய்ச்சலால் பாதிக்கப்பட்ட குடும்பஸ்தர் பரிதாபமாக உயிரிழந்த
சம்பவம் யாழில் பதிவாகியுள்ளது.

அச்சுவேலி – தம்பாலை பகுதியை சேர்ந்த 57 வயதான குடும்பஸ்தருக்கு கடந்த 21ஆம்
திகதி காய்ச்சல் ஏற்பட்டது.

இந்நிலையில் அவர் நேற்றுமுன்தினம் அச்சுவேலி வைத்தியசாலையில்
அனுமதிக்கப்பட்டு பின்னர் அன்றையதினமே யாழ்ப்பாணம் போதனா
வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டார்.

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த அவர் சிகிச்சை
பலனின்றி நேற்றையதினம்உயிரிழந்துள்ளார்.

அவரது சடலம் மீதான மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி
ஆ.ஜெயபாலசிங்கம் மேற்கொண்டார்.

அதேவேளை,  நிமோனியா காய்ச்சல் காரணமாகவே குறித்த மரணம் சம்பவித்துள்ளதாக உடற்கூற்று பரிசோதனைகளில் தெரியவந்துள்ளது.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments