Tuesday, August 11, 2026
https://thaaitv.com/
Homeஇலங்கைஎன்மீது கீறல் விழுந்தாலும் அரசே பொறுப்பு - ஞானசார தேரர்

என்மீது கீறல் விழுந்தாலும் அரசே பொறுப்பு – ஞானசார தேரர்

படுகொலை செய்யப்பட்ட டான் பிரியசாத்தின் உடல் நேற்று முதல் பொது அஞ்சலிக்காக ஜெயரத்னே இறுதிச் சடங்கு அரங்கில் வைக்கப்பட்டுள்ளது.

டேன் பிரியசாத்தின் பூதவுடலுக்கு அரசியல்வாதிகள் உள்ளிட்ட பலரும் இறுதி அஞ்சலி
செலுத்தி வருகின்றனர்.

குறிப்பாக கலகொட அத்தே ஞானசார தேரர் மற்றும் பத்தரமுல்ல சீலரதன, ரேணுகா
பெரேரா,அசேல சம்பத் மற்றும் பலர் உடலுக்கு அஞ்சலி செலுத்துவதற்காக வருகை
தந்திருந்தனர்.

இதேவேளை தனது உயிருக்கு அச்சுறுத்தால் உள்ளதாகவும் தனக்கு ஏதாவது நடந்தால்
அரசாங்கமே பொறுப்பேற்க வேண்டும் எனவும் கலபொட அத்தே ஞானசார தேரர்
குறிப்பிட்டார்.

மக்கள் விடுதலை முன்னனியின் செயற்பாட்டாளர் ஒருவர் டான் பிரசாத்தின் மரணத்தை அடுத்து பதிவிட்டுள்ள பேஸ்புக் பதிவில் தனது உயிருக்கும் அச்சுருத்தல் ஏற்படும் வகையில் சில பதிவுகளை இட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.

கடந்த 20 வருடங்களாக உலக பயங்கரவாதம் தொடர்பில் ஆராய்ந்து பல்வேறு விடங்களை வெளிக்கொண்டுவந்த தமக்கு இவ்வாறான நிலை தோன்றியுள்ளதாக அவர் கூறியுள்ளார்.

நாட்டை சுற்றி இஸ்லாமிய அடிப்படைவாதிகள் சூழ்ந்துள்ளனர். அவர்களோடு பாதாள
கோஷ்டிகளுக்கு சம்பந்தம் உள்ளது.

அந்த தொடர்புகளை நாம் வெளிப்படுத்துவோம். சிலநேரம் பாதாள கோஷ்டிகளுக்கு
கொந்தராத்து வழங்கி எம்மையும் கொலை செய்ய முடியும் என அவர் கூறியுள்ளார்.

என்மீது கீறல் விழுந்தாலும் அதனை அரசு பொறுப்பேற்க வேண்டும் என கூறிய அவர்
நாம் நாட்டுக்காக பணியாற்றியவர்கள் அன்றி அரசியல் செய்தவர்கள் அல்ல என
அவர் கூறினார்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments