Wednesday, June 24, 2026
https://thaaitv.com/
Homeஇலங்கைகனேடிய பொதுத் தேர்தலில் ஹரி ஆனந்தசங்கரி உட்பட மூன்று தமிழர்கள் வெற்றி

கனேடிய பொதுத் தேர்தலில் ஹரி ஆனந்தசங்கரி உட்பட மூன்று தமிழர்கள் வெற்றி

2025 கனேடிய பொதுத் தேர்தலில் போட்டியிட்ட ஆறு தமிழ் வேட்பாளர்களில்
இலங்கைத் தமிழரான ஹரி ஆனந்தசங்கரி உட்பட மூவர் வெற்றி பெற்றுள்ளனர்.

கனேடிய பொதுத் தேர்தல் வாக்குப்பதிவு நேற்று (28) நடைபெற்றது.

இந்தத் தேர்தலில் விபரல் கட்சியின் சார்பில் மூவரும், கன்சர்வேடிவ் கட்சியின் சார்பில் இருவரும், பசுமை கட்சியின் சார்பில் ஒருவரும் என மொத்தம் ஆறு தமிழர்கள் வேட்பாளர்களாக போட்டியிட்டனர்.

இவர்களில் விபரல் கட்சியின் சார்பில் போட்டியிட்ட மூன்று தமிழர்களும் வெற்றி
பெற்றுள்ளனர்.

Oakville  கிழக்கு தொகுதியில் அனிதா ஆனந்த், Scarborough-Guildwood-Rouge Park தொகுதியில் ஹரி ஆனந்தசங்கரி, ickering–Brooklin  தொகுதியில் ஜுனிதா நாதன் ஆகியோர் இந்தத் தேர்தலில் வெற்றி பெற்று நாடாளுமன்ற உறுப்பினர்களாக தெரிவாகியுள்ளனர்.

இதுவரை வெளியான உத்தியோகபற்றற்ற முடிவுகளின் அடிப்படையில் அனிதா ஆனந்த் 28,498  வாக்குகளையும், ஹரி ஆனந்தசங்கரி 33,164  வாக்குகளையும்,
ஜுனிதா நாதன் 24,951 வாக்குகளையும் பெற்று நாடாளுமன்ற உறுப்பினர்களாக
தெரிவாகியுள்ளனர்.

இந்தத் தேர்தலில் அதிக ஆசனங்களை வெற்றி பெற்று லிபரல் கட்சி சிறுபான்மை ஆட்சி அமைத்துள்ள நிலையில் மீண்டும் அனிதா ஆனந்த், ஹரி ஆனந்தசங்கரி ஆகியோருக்கு அமைச்சு பதவிகள் வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

 

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments