Tuesday, June 23, 2026
https://thaaitv.com/
Homeசினிமா“தயவு செய்து சிகரெட் வேண்டாம்...” - நடிகர் சூர்யா அறிவுரை

“தயவு செய்து சிகரெட் வேண்டாம்…” – நடிகர் சூர்யா அறிவுரை

“தயவு செய்து சிகரெட் அடிக்காதீர்கள்” என்று ரசிகர்களுக்கு சூர்யா அட்வைஸ் செய்துள்ளார். மே 1-ம் தேதி சூர்யா நடிப்பில் வெளியாகவுள்ள படம் ‘ரெட்ரோ’. இதன் விளம்பரப்படுத்துதல் நிகழ்ச்சி கேரளாவில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் சூர்யா பேசும்போது, “‘ரெட்ரோ’ பார்த்துவிட்டேன். கண்டிப்பாக உங்கள் அனைவருக்கும் பிடிக்கும் என நம்புகிறேன். கண்டிப்பாக முந்தைய 45 படங்களை விட வேறு மாதிரி இருக்கும்.

உங்களிடம் இருந்து கிடைக்கும் இந்த அன்புக்காக கண்டிப்பாக உங்களை மகிழ்விக்க கூடிய வித்தியாசமான படங்கள் செய்வேன். இரண்டரை மணி நேரம் நீங்கள் திரையரங்கு வந்தால் உங்களை மகிழ்விக்க என்ன செய்ய வேண்டுமோ செய்வேன்” என்று தெரிவித்தார் சூர்யா.

அதனைத் தொடர்ந்து பேச்சை முடிக்கும் முன்பு, “இப்படத்தின் காட்சிக்காக மட்டுமே சிகரெட் அடித்தேன். நிஜ வாழ்க்கையில் யாரும் தயவு செய்து சிகரெட் அடிக்காதீர்கள். ஒரு இழுப்பு தானே என்று ஆரம்பித்தால், விடவே முடியாது. அந்தச் செயலை எப்போதுமே ஆதரிக்க மாட்டேன்” என்று பேசினார் சூர்யா.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments