Wednesday, June 24, 2026
https://thaaitv.com/
Homeஇலங்கைவாக்களிப்பு நிலையங்களுக்கு அனுப்பி வைக்கப்படும் வாக்குப் பெட்டிகள்

வாக்களிப்பு நிலையங்களுக்கு அனுப்பி வைக்கப்படும் வாக்குப் பெட்டிகள்

நாடு முழுவதும் நாளை நடைபெறவுள்ள 339 உள்ளூராட்சி மன்றங்களுக்கான
தேர்தலுக்கான வாக்குப்பெட்டிகள் வாக்களிப்பு நிலைய பொறுப்பதிகாரிகளிடம்
கையளிக்கும் செயற்பாடுகள் தற்போது முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

அந்தவகையில் யாழ் மாவட்டத்தில்,  இன்றைய தினம்(05) காலை 08.18 மணிக்கு
முதலாம் கட்ட பேருந்துக்களில் – ஊர்காவற்றுறை வாக்களிப்பு நிலையத்திற்குச்
செல்லும் முதலாவது பேருந்து யாழ் மத்திய கல்லூரிக்கு முன்பாக இருந்து புறப்பட்டுள்ளது.

யாழ்ப்பாண மாவட்ட செயலாளரும் தெரிவத்தாட்சி அலுவலருமான மருதலிங்கம் பிரதீபன், பிரதித் தேர்தல் ஆணையாளர் சசீலன் , தேர்தல் கடமைக்காக இணைக்கப்பட்ட சுகாதார அமைச்சின் சிரேஷ்ட மேலதிகச் செயலாளர் பொ. தயானந்தன் , மேலதிக மாவட்ட செயலாளரும் (காணி) நலனோம்பல் உதவித் தெரிவத்தாட்சி அலுவலருமான க.ஸ்ரீமோகனன் மற்றும் உதவித் தெரிவத்தாட்சி அலுவலர்களும் வாழ்த்தி வழி அனுப்பி வைத்திருந்ததாக தெரிவிக்கப்படுகிறது.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments