Tuesday, June 23, 2026
https://thaaitv.com/
Homeஇலங்கையாழிலிருந்து ஜனாதிபதிக்கு பறந்த அவசர கோரிக்கை கடிதம்

யாழிலிருந்து ஜனாதிபதிக்கு பறந்த அவசர கோரிக்கை கடிதம்

கொழும்பு இராமநாதன் இந்துக் கல்லூரியில் கல்வி கற்ற மாணவி டில்ஷி அம்ஷிகாவின் மரணத்திற்கு நீதி கோரி யாழ்ப்பாணத்தை தலமையாக கொண்ட தன்னார்வ இளைஞர் அமைப்பான சமாதானத்திற்கான இளைஞர் பேரவையால் ஜனாதிபதிக்கு கடிதம் ஒன்று அனுப்பி வைக்கப்பட்டுள்ளது

இக் கடிதத்தில்,

இந் நாட்டில் தொடர்ந்து நடைபெற்று வருகின்ற பெண்கள் மற்றும் சிறுவர்கள் மீதான
வன்முறைகள்இ ஒடுக்குமுறைகளுக்கு எதிரான சட்ட ரீதியான நடவடிக்கைகளை
இலங்கை அரசாங்கம் மிகவும் இறுக்கமாக பின்பற்ற வேண்டும்.

கொழும்பில் கடந்த 2025.04.29 தன் உயிரை மாய்த்துக் கொண்ட சிறுமி.
டில்ஷி அம்ஷிகாவிற்கு ஏற்பட்ட வன்கொடுமைக்கு உடந்தையாக இருந்தவர்களுக்கும்
அக் குற்றத்தை மேற்கொண்டவர்கள் மீது உரிய விசாரணை இடம்பெற்று
காலதாமதமின்றி தகுந்த தண்டனை வழங்க வலியுறுத்துகின்றோம்.

பெண்கள் சார்ந்த நீதித்துறைஇ சட்டத்துறை சார்ந்தவர்கள் பொறுப்புடன் செயற்பட்டு
குற்றவாளிகளை இனங்கண்டு அவர்களுக்கு தகுந்த தண்டனை வழங்கி சிறுவர்கள்இ
பாதுகாப்பை உறுதிப்படுத்த வேண்டும்.

எதிர்காலத்தில் எமது நாட்டில் வன்முறை,  துஷ்பிரயோகங்கள் அற்ற சமூகத்தை
உருவாக்க அனைவரும் விழிப்புடன் செயற்படுவோம். என தெரிவிக்கப்பட்டுள்ளது.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments