Wednesday, June 24, 2026
https://thaaitv.com/
Homeஇலங்கைகனடாவில் நினைவுச்சின்னம் திறப்புக்கு அலி சப்ரி கடும் எதிர்ப்பு

கனடாவில் நினைவுச்சின்னம் திறப்புக்கு அலி சப்ரி கடும் எதிர்ப்பு

இலங்கை இனப்படுகொலையில் ஈடுபடவில்லை என தெரிவித்துள்ள
முன்னாள் வெளிவிவகார அமைச்சர் அலிசப்ரி கனடாவில் தமிழர் இனப்படுகொலை
நினைவுச்சின்னம் திறப்புஇ இனப்படுகொலை கல்விவாரம் அனுசரிப்பு போன்றவற்றை கடுமையாக விமர்சித்துள்ளார்

சமூக ஊடக பதிவில் அவர் தெரிவித்துள்ளதாவது.

இலங்கை இனப்படுகொலையில் ஈடுபடவில்லை. அந்த கூற்று ஆதாரமற்றது மாத்திரமல்ல,  மிகவும் பாதிப்பை ஏற்படுத்தக்கூடியது.

எந்தவொரு சர்வதேச நீதிமன்றமும் இலங்கையை இதுவரை இனப்படுகொலை
குற்றவாளியாக கண்டறியவில்லை.

இலங்கையில் நடந்தது துன்பகரமான,  ஆனால் கனடா உட்பட 30 க்கும்
நாடுகளில் தடை செய்யப்பட்ட விடுதலைப்புலிகள் அமைப்பினருடனான மோதலை
முடிவிற்கு கொண்டுவருவதற்கான இராணுவ நடவடிக்கை.

போரின் போது அப்பாவிகள் ஒவ்வொருவரினதும் உயிரிழப்பு மனவேதனையை
ஏற்படுத்தினாலும்இ மோதலை இனப்படுகொலை என சித்தரிப்பது உண்மையை
சிதைப்பது மாத்திரமல்லாமல்,  அவமதிப்பை ஏற்படுத்துகின்ற ஒரு விடயம்.

கனடாவில் இடம்பெறும் இந்த செயற்பாடுகள்,  நமது கள யதார்த்தங்களில் இருந்து
வெகு தொலைவில் உள்ளன. மேலும் வாக்குவங்கியை நோக்கமாக கொண்ட இவ்வாறான நடவடிக்கைகளினால் பழைய காயங்கள் மீண்டும் கிளறப்படலாம். என தெரிவித்தார்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments