பணியில் இருந்து இடைநீக்கம் செய்யப்பட்ட பொலிஸ்மா அதிபர்
தேசபந்து தென்னகோன் தவறான நடத்தை மற்றும் கடுமையான பதவி
துஷ்பிரயோகம் குறித்து விசாரிக்கும் விசாரணைக் குழுவின் முன்னிலையில்
எதிர்வரும் 19 ஆம் திகதி பிற்பகல் 2:00 மணியளவில் ஆஜராகுமாறு அறிவிக்கப்பட்டுள்ளது.
அவருடைய தவறான நடத்தை மற்றும் கடுமையான பதவி துஷ்பிரயோகம் குறித்து
விசாரித்து அறிக்கை அளிக்க நியமிக்கப்பட்ட விசாரணைக் குழு’ இந்த அறிவிப்பை
வெளியிட்டுள்ளது.

