Tuesday, June 30, 2026
https://thaaitv.com/
Homeஇலங்கை2ம் சங்கிலிய மன்னனின் 406 ஆவது நினைவு தினம்

2ம் சங்கிலிய மன்னனின் 406 ஆவது நினைவு தினம்

யாழ்ப்பாணத்தை ஆட்சி செய்த 2ம் சங்கிலிய மன்னனின் 406 ஆவது
நினைவு தினம் இன்று காலை யாழ்ப்பாணத்தில் நினைவுகூரப்பட்டது.

யாழ்ப்பாணம் பருத்தித்துறை வீதி செம்மணிச் சந்தியிலுள்ள சங்கிலி மன்னன்
சிலைக்கு மலர் மாலை அணிவிக்கப்பட்டு அஞ்சலி செலுத்தப்பட்டது.

இதனொரு அங்கமாக 2ம் சங்கிலிய மன்னனின் வரலாற்றுக் குறிப்புகள்
அடங்கிய நூலொன்றும் வெளியிட்டு வைக்கப்பட்டது

சிவசேனையின் ஏற்பாட்டில் யாழ்ப்பாண பல்கலைக்கழக ஒய்வு நிலை பேராசிரியர்
க.தேவராஜா தலைமையில் இடம்பெற்ற இந்த நிகழ்வில் மருதனார் மடம் ஆஞ்சநேயர்
கோவில் ஆதீன கர்த்தா சிவஶ்ரீ சுந்தரேஸ்வரக் குருக்கள், இந்திய துணைத் தூதரக
அதிகாரி நாகராஜன்,  முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம்.
யாழ் மாநகர ஆணையாளர் ச.கிருஷ்ணேந்திரன்,  மதத்தலைவர்கள், வர்த்தகர்கள்,
பொதுமக்கள் கலந்துகொண்டனர்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments