Wednesday, May 13, 2026
https://thaaitv.com/
Homeஇலங்கைமன்னாரில் துப்பாக்கிச் சூட்டுக்காயங்களுடன்கடற்படை அதிகாரியின் சடலம் மீட்பு

மன்னாரில் துப்பாக்கிச் சூட்டுக்காயங்களுடன்கடற்படை அதிகாரியின் சடலம் மீட்பு

மன்னார் – நானாட்டான் பிரதேச செயலகப் பிரிவுக்கு உட்பட்ட அச்சங்குளம்
கடற்கரை பிரதேசத்தில் துப்பாக்கிச் சூட்டுக் காயங்களுடன் கடற்படை அதிகாரி
ஒருவரின் சடலம் கண்டு பிடிக்கப்பட்டுள்ளது.

குறித்த சடலம் நேற்று கண்டுபிடக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

உயிரிழந்த கடற்படை அதிகாரி 37 வயதுடைய மூன்று பிள்ளைகளின் தந்தை என
தெரியவந்துள்ளது.

குறித்த அதிகாரி தன்னைத்தானே சுட்டு உயிரை மாய்த்துக் கொண்டுள்ளதாக
ஆரம்ப கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

குறித்த சம்பவமானது அச்சங்குளம் கடற்கரை ஓரத்தில் அமைக்கப்பட்ட கடற்படையின் கண்காணிப்பு காவலரணில் இடம்பெற்றுள்ளதாக தெரியவருகிறது.

சம்பவ இடத்திற்கு முதல் கட்ட விசாரணைகளுக்காக முருங்கன் பொலிஸார்,
தடயவியல் நிபுணர்கள், சென்று பார்வையிட்டனர்.

பின்னர் மன்னார் மாவட்ட நீதிபதி வருகை தந்து சடலத்தை பார்வையிட்டு
விசாரணைகளின் பின்னர் மாவட்ட வைத்தியசாலைக்கு எடுத்துச் செல்லப்பட்டுள்ளது.

இவரது மரணத்திற்கான காரணம் இதுவரை தெரியவராத நிலையில்,  பொலிஸார்
மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments