யாழில் ஆலய உண்டியலுடன் மோதி விபத்துக்குள்ளான முதியவர் ஒருவர் நேற்று
உயிரிழந்துள்ளார்.
சரசாலை தெற்கு, சாவகச்சேரி பகுதியைச் சேர்ந்த 71 வயதுடைய வைத்திலிங்கம்
சிவராஜன் என்பவரே இதன்போது உயிரிழந்துள்ளார்.
கடந்த 16ஆம் திகதி வீட்டில் இருந்து மோட்டார் சைக்கிளில் சென்றுகொண்டிருந்த
சமயம்இ கொடிகாமம் பிள்ளையார் கோவிலுக்கு அருகாமையில் இருந்த
சிமெந்தினாலான உண்டியலுடன் மோதி விபத்துக்குள்ளான நிலையில்
மயக்கமடைந்துள்ளார்.
பின்னர் சாவகச்சேரி ஆதார வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டு,
பின் மேலதிக சிகிச்சைக்காக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில்
கொண்டு செல்லப்பட்டு அங்கு சிகிச்சை பெற்று வந்தார். இருப்பினும்
சிகிச்சை பலனின்றி நேற்று உயிரிழந்துள்ளார்.
அவரது சடலம் மீதான மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி
நமசிவாயம் பிறேம்குமார் மேற்கொண்டார்.

