யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கு கட்டைக்காடு பகுதியில் குடும்ப பெண் ஒருவரிடம்
வெளி நாடு அனுப்புவதாக கூறி 27, 80000 ரூபாவை மோசடி செய்த பெண் ஒருவரை
பொலிசார் கைது செய்துள்ளனர்
கடந்த 2023ம் ஆண்டு வடமராட்சி கிழக்கு கட்டைக்காடு பகுதியை சேர்ந்த
ரமேஷ் பிரேமா என்னும் குடும்ப பெண்ணிடம் அவரது கணவரை கனடா அனுப்புவதாக கூறி பெண் ஒருவர் 27, 80000 ரூபாய் பணத்தை பெற்றுள்ளார்.
அதன் பின்பு அவரது தொடர்பு துண்டிக்கப்பட்டதுடன் தாம் மோசடி செய்யப்பட்டதை
உணர்ந்த குடும்ப பெண் காசு பரிமாற்றம் செய்யப்பட்டமைக்கான அனைத்து
ஆதாரங்களுடன் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடளித்ததன் பிரகாரம் 2024ம் ஆண்டு சந்தேக நபருக்கு கிளிநொச்சி நீதிமன்றம் பயணத்தடை விதித்து பிடியாணை
பிறப்பித்திருந்தது.
குறித்த பெண் சந்தேக நபர் மருதங்கேணி பொலிசாரின் உதவியுடன் செம்பியன்பற்றில் வைத்து நேற்றைய தினம் (25) கைது செய்யப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்டவரிடம் பொலிசார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து
வருவதுடன் குறித்த நபர் அதே பகுதியில் பலரிடம் மோசடி செய்துள்ளமை
விசாரணையின்மூலம் தெரியவந்துள்ளது.

