Sunday, June 28, 2026
https://thaaitv.com/
Homeஇலங்கைநல்லூர் கந்தசுவாமி ஆலய பெருந்திருவிழா மாநகர சபையிடம் காளாஞ்சி கையளிப்பு

நல்லூர் கந்தசுவாமி ஆலய பெருந்திருவிழா மாநகர சபையிடம் காளாஞ்சி கையளிப்பு

வரலாற்றுச் சிறப்பு மிக்க நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தின் வருடாந்தப் பெருந்திருவிழாவை முன்னிட்டு யாழ். மாநகர சபையினருக்கு ஆலய சம்பிரதாய முறைப்படி இன்றைய தினம் (27) பெருவிழா பட்டோலை அடங்கிய காளாஞ்சி ஆலய கணக்கு பிள்ளையால் கையளிக்கப்பட்டது.

நல்லூர் கந்தசுவாமி கோவில் வருடாந்த பெருவிழா எதிர்வரும் ஜீலை 29ஆம் திகதி
கொடியேற்றத்துடன் ஆரம்பமாகி, தொடர்ந்து இருபத்தைந்து தினங்கள் நடைபெறவுள்ளது.

இந்நிலையில்,  நல்லூர் கந்தன் பெருவிழாவுக்கான ஆலய சூழல் பராமரிப்பு, ஆலயத்துக்கு வரும் பக்தர்களுக்கான அத்தியாவசிய தேவைகளை பூர்த்தி செய்தல்,வீதி தடைகள் அமைத்து சீரான போக்குவரத்துக்கு வழிசெய்தல் உள்ளிட்ட பல்வேறு பணிகளில் ஈடுபடும் யாழ்.மாநகர சபையினருக்கு ஆலய சம்பிரதாய முறைப்படி இன்றைய தினம் (27) பெருவிழா பட்டோலை அடங்கிய காளாஞ்சி ஆலய கணக்குபிள்ளையால் கையளிக்கப்பட்டது.

இந்த வைபவத்தின் போது பாரம்பரிய முறைப்படி யாழ்.மாநகர சபை வளாகத்தில்
தோரணங்கள் கட்டி அலங்காரங்கள் அமையப்பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments