Thursday, October 1, 2026
https://thaaitv.com/
Homeஇலங்கைதையிட்டி காணி விவகாரம் : 5 வழக்குகள் மல்லாகம் நீதிமன்றத்தில் விசாரணை

தையிட்டி காணி விவகாரம் : 5 வழக்குகள் மல்லாகம் நீதிமன்றத்தில் விசாரணை

தையிட்டியில் தமிழ் மக்களின் சொந்தக் காணிகளை சட்டவிரோதமாக ஆக்கிரமித்து
பிரம்மாண்ட விகாரை அமைக்கப்பட்டமைக்கு எதிராக தொடர்ந்து குரல்
கொடுத்து வருவதாக தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் பொதுச் செயலாளர்
தெரிவித்துள்ளார்.

மக்களின் நியாயமான போராட்டத்தை முடக்குவதற்காக பொலிஸார் பொய்
வழக்குகளைத் தாக்கல் செய்து அச்சுறுத்தல் நடவடிக்கைகளில் ஈடுபட்டு
வருவதாகவும் அவர் குற்றஞ்சாட்டியுள்ளார்.

இது தொடர்பாக இன்று (01) மல்லாகம் நீதிவான் நீதிமன்றத்தில் ஐந்து வழக்குகள்
விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

தையிட்டி விவகாரம் வெறுமனே காணி உரிமைக்கான போராட்டம் அல்ல எனத்
தெரிவித்த தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் பொதுச் செயலாளர்இ வடக்கு
மற்றும் கிழக்கில் தமிழ் மக்களின் வரலாற்று ரீதியான இருப்பையும் ஜனநாயக
உரிமைகளையும் பாதுகாப்பதற்கான போராட்டமாகும் எனக் குறிப்பிட்டுள்ளார்.

அரசாங்கத்தினதும் பொலிஸாரினதும் அடக்குமுறைகளுக்கு அஞ்சாது, தமிழ்
மக்களின் உரிமைகளை வென்றெடுப்பதற்காக அனைவரும் ஒன்றிணைந்து
அணிதிரள வேண்டும் எனவும் அவர் அழைப்பு விடுத்துள்ளார்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments