Sunday, June 28, 2026
https://thaaitv.com/
Homeஇலங்கைநாட்டை உலுக்கிய கோர விபத்துக்கான காரணம் வெளியானது

நாட்டை உலுக்கிய கோர விபத்துக்கான காரணம் வெளியானது

அண்மையில் இலங்கையை உலுக்கிய கோர விபத்தில் 23 பேர் உயிரிழந்தவிபத்துக்கான காரணம் தற்போது வெளியிடப்பட்டுள்ளது.

பேருந்தின் சாரதி ஓய்வின்றி இருந்தமையினால் ஏற்பட்ட நித்திரையே இந்த விபத்துக்கு பிரதான காரணம் என்று விசாரணை அறிக்கை தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனினும் கதிர்காமம் போக்குவரத்து சபையினால் அனுபவம் வாய்ந்த தொழில்நுட்ப
வல்லுநர்களை பயன்படுத்தி பேருந்தை முறையாக சரிசெய்யவில்லை எனவும்
சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

மோட்டார் போக்குவரத்து திணைக்களம் வெளியிட்டுள்ள ஆய்வு அறிக்கையில்,
கடைசியாக 2023 ஆம் ஆண்டு பழுதுபார்க்கப்பட்டதாக கூறப்பட்ட போதிலும்,
பேருந்தின் கம்பிகள் சேதமடைந்திருந்தன,  ஆனால் அவை அகற்றப்படவில்லை மற்றும் புதிய தகடுகள் பயன்படுத்தப்படவில்லை என கூறப்படுகின்றது.இதனால் விபத்தின் போது பேருந்துக்கு பாரிய பாதிப்புகள் ஏற்பட்டதாக ஆய்வு அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

விபத்து நடந்த இடத்தின் இருபுறமும் இரண்டு மரக் கடைகள் கட்ட 2022 ஆம் ஆண்டில்
வீதி அபிவிருத்தி அதிகார சபை அனுமதி வழங்கியிருந்தது.எனினும் குறித்த கடையின் உரிமையாளர்கள், பெரிய மரங்களை வெட்டி தமது வாடிக்கையாளர்களின்
வசதிக்காக மண்ணை சமன் செய்துள்ளதாக ஆய்வு அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

கடந்த 11ஆம் திகதி சம்பவித்த கோர விபத்தில் 23 பேர் உயிரிழந்த நிலையில் 60 பேர்
காயமடைந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments