Tuesday, June 30, 2026
https://thaaitv.com/
Homeஇலங்கைஅடுத்த 36 மணி நேரத்தில் 100 மி.மீ.க்கு மேல் மழை பெய்ய வாய்ப்பு

அடுத்த 36 மணி நேரத்தில் 100 மி.மீ.க்கு மேல் மழை பெய்ய வாய்ப்பு

மேல்,  சப்ரகமுவ,  மத்திய மற்றும் வடமேல் மாகாணங்களிலும், காலி மற்றும்
மாத்தறை மாவட்டங்களிலும் அடுத்த 36 மணி நேரத்தில் அவ்வப்போது
மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல்
திணைக்களம் தெரிவித்துள்ளது.

அறிக்கை ஒன்றை வெளியிட்டு அந்தத் திணைக்களம் மேலும் தெரிவிக்கையில்,

மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும்,  நுவரெலியா,  கண்டி,  காலி மற்றும்
மாத்தறை மாவட்டங்களிலும் சில இடங்களில் 100 மி.மீ.க்கு மேல் பலத்த
மழை பெய்யக்கூடும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

வடமத்திய மாகாணத்திலும்,  மன்னார் மற்றும் அம்பாந்தோட்டை மாவட்டங்களிலும்
சில தடவைகள் மழை பெய்யக்கூடும் எனவும், மத்திய மலைநாட்டின்
மேற்கு சரிவுப் பகுதிகளிலும்,  வடக்கு,  வடமத்திய மற்றும் வடமேல் மாகாணங்களிலும்,  அம்பாந்தோட்டை மற்றும் திருகோணமலை மாவட்டங்களிலும் அவ்வப்போது மணிக்கு 50-60 கிலோமீற்றர் வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும் எனவும் அந்தத் திணைக்களம் வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதேபோல்,  நாட்டின் ஏனைய பிரதேசங்களில் அவ்வப்போது மணிக்கு
30-40 கிலோமீற்றர் வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும் எனவும்
வளிமண்டலவியல் திணைக்களம் வெளியிட்ட அறிக்கையில் மேலும்
குறிப்பிடப்பட்டுள்ளது.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments