2025 ஆம் ஆண்டு உள்ளூராட்சி மன்றத் தேர்தல் முடிவுகளின்படி அந்தந்த
வட்டாரங்களுக்காகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள மற்றும் தெரிவு செய்து
அனுப்பியுள்ள உறுப்பினர்களின் பெயர்கள் மாவட்டத்தின் அடிப்படையில்
வர்த்தமானியில் வெளியிடப்பட்டுள்ளது.
அதன்படி யாழ்ப்பாணம், முல்லைத்தீவு, மன்னார் ஆகிய மாவட்டங்களிலுள்ள
உள்ளூராட்சி மன்ற நிறுவனங்களுக்கான உறுப்பினர்களின் பெயர்கள்
வர்த்தமானி அறிவித்தலில் வெளியிடப்பட்டுள்ளது.
ஏனைய மாவட்டங்களுக்கான உள்ளூராட்சி மன்றங்களுக்கு தெரிவாகியுள்ள
உறுப்பினர்களின் பெயர்களும் விரைவில் வர்த்தமானி அறிவித்தலில்
வெளியிடப்படவுள்ளது.

