Tuesday, June 30, 2026
https://thaaitv.com/
Homeஇலங்கைகாலி, நுவரெலியா, இரத்தினபுரி மாவட்டங்களுக்கு மண்சரிவு எச்சரிக்கை

காலி, நுவரெலியா, இரத்தினபுரி மாவட்டங்களுக்கு மண்சரிவு எச்சரிக்கை

காலிஇ நுவரெலியா,  இரத்தினபுரி ஆகிய மாவட்டங்களுக்கு முதற்கட்ட மண்சரிவு
அபாய எச்சரிக்கை விடுக்கப்படுவதாக தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம்
தெரிவித்துள்ளது.

இதன்படி, காலி மாவட்டத்தில் பத்தேகம, கண்டி மாவட்டத்தில் கங்கை ,ஹல கோறளே, கேகாலை மாவட்டத்தில் அரநாயக்க, நுவரெலியா மாவட்டத்தில் அம்பகமுவ, நோர்வூட் மற்றும் இரத்தினபுரி மாவட்டத்தில் இரத்தினபுரி ஆகிய
பிரதேச செயலகப் பிரிவுகளுக்கே இவ்வாறு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இந்த எச்சரிக்கை அறிவிப்பு இன்று மாலை 4 மணி முதல் நாளை மாலை 4 மணி வரை நடைமுறையில் இருக்கும் என்று தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் தெரிவித்துள்ளது.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments