Tuesday, June 30, 2026
https://thaaitv.com/
Homeஇலங்கைபேருந்து மீது சரிந்து விழுந்த பாரிய மரம்

பேருந்து மீது சரிந்து விழுந்த பாரிய மரம்

ஆடைத் தொழிற்சாலை ஊழியர்களை ஏற்றிச் செல்வதற்காக நிறுத்தப்பட்டிருந்த
தனியார் பேருந்து மீது மரம் விழுந்ததில் பேருந்துக்கு பலத்த சேதம் ஏற்பட்டதாக
நோர்வூட் பொலிஸார் தெரிவித்தனர்.

ஹட்டன்-மஸ்கெலியா பிரதான வீதியில் நிவ்வெளி பகுதியில் உள்ள ஆடைத்
தொழிற்சாலையில் பணிபுரியும் ஊழியர்களை ஏற்றிச் செல்வதற்காக பிரதான வீதியில் நிறுத்தப்பட்டிருந்த பேருந்து ஒன்றின் மீது வோரோடு மரம் சரிந்து விழுந்துள்ளது.

இதனால் நேற்று (30) மாலை மரம் வெட்டப்படும் வரை 6:00 மணி முதல் இரவு 8:00 மணி வரை வீதியின் போக்குவரத்து முற்றிலுமாக தடைப்பட்டிருந்தது.

மரம் சரிந்த நேரத்தில் பேருந்தில் யாரும் இல்லை என்றும்இ மரம் முறிந்து விழுந்ததால் பேருந்து கடுமையாக சேதமடைந்துள்ளதாகவும் நோர்வூட் பொலிஸார் தெரிவித்தனர்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments