Friday, May 8, 2026
https://thaaitv.com/
Homeபிரித்தானியாபிரித்தனியாவில் முன்னெடுக்கப்பட்ட இறந்தவர்களை கணக்கெடுக்கும் விசேட பணி

பிரித்தனியாவில் முன்னெடுக்கப்பட்ட இறந்தவர்களை கணக்கெடுக்கும் விசேட பணி

பிரித்தானியாவில் நடைபெற்ற முள்ளிவாய்க்கால் இனப்படுகொலையின் நினைவேந்தல் நாளில் சிறிலங்காவில் போரினால் இறந்தவர்களை கணக்கெடுக்கும்
பணி முன்னெடுக்கப்பட்டது.

அந்தவகையில் பிரித்தானியால் உள்ள ஒக்ஸ்போர்ட் நகரில் உள்ள உலகத்தமிழர்
வரலாற்று மையத்திலும்,  லண்டனில் உள்ள பிரித்தானிய பிரதமரின் உத்தியோக பூர்வ வாசல்தலத்தின் முன்னாலும் இடம்பெற்ற தமிழ் இன அழிப்பு நினைவேந்தல்
நிகழ்வுகளின் போது இந்த இரு இடங்களிலும் இந்த பணி முன்னெடுக்கப்பட்டுள்ளது.

இலங்கையில் யுத்தம் 2009 ஆம் ஆண்டு நிறைவுக்கு வந்த நிலையிலும் இன்றுவரை
யுத்தத்தால் கொல்லப்பட்டவர்களின் முழுமையான பெயர் விபரங்களோ பட்டியலோ
யாரிடமும் இல்லை. இதனால் இறந்தவர்களை கணக்கெடுக்கும் செயற்திட்டத்தை
சர்வதேச உண்மை மற்றும் நீதித்திட்டத்திற்கான அமைப்பு மற்றும் மனித உரிமைகள்
தரவு ஆய்வுக்குழு ஆகிய அமைப்புகள் இனைந்து முன்னெடுத்துவருகின்றன.

லண்டன் நகரில் உள்ள பிரதமரின் வாசஸ்தல முன்றத்தில், ஆரங்கன் ஜேயக்குமார்,
அபினாஸ் திலீபன், பவானந்தன் தர்மகுலசிங்கம்,  கிசோத்தன் காந்தன்,
பிரசாந் இராசரெத்தினம்,  ருத்திகா சிவன்ஞானம்,  நிலானி சந்திரபிரகாசன்,
விஜயகுமார் ஜெயகீசன்,  விஸ்வா ரமேஸ், விதுஷன் கணேசமூர்த்தி. ஆகியோர்
கொண்ட அணி இந்த பணியை முன்னெடுத்திருந்தது.

அதேபோல ஒக்ஸ்போட் நகரில் இந்த பணியை புகழினியன் விக்டர் விமலசிங்கம்,
நிரோஜன் பாலசிங்கம்,  கோகுலன் சிவசிதம்பரம்,  உதயராஜா பவசுதன்,
தனபால் சுப்ரமணியம்,  கயந் சிவதீஸ்வரன், டிலோஜன் துரைசாமி ஆகியோர்
கொண்ட அணி முன்னெடுத்திருந்தது.

இதன் மூலம் யுத்தத்தில் உயிரிழந்தவர்களின் பெயர் விபரங்களை ஆவணப்படுத்தி
சர்வதேச நீதிமன்றத்தில் சமர்ப்பித்து இலங்கையில் தமிழ் மக்களுக்கு எதிராக
நடைபெற்ற இனப்படுகொலையை சட்டரீதியாக நிரூபிக்க முடியும் என
நம்பப்படுகிறது.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments