பிரித்தானியாவில் 16 வயதிற்குட்பட்டவர்கள் சமூக வலைத்தளங்களை
பயன்படுத்துவதைத் தடை செய்யப்போவதாகவும், கேமிங் மற்றும் நேரலை
தளங்களுக்குக் கட்டுப்பாடுகளை விதிக்கப்போவதாகவும் பிரித்தானிய பிரதமர்
கீர் ஸ்டார்மர் தெரிவித்துள்ளார்.
மேலும் கேமிங் மற்றும் நேரலை தளங்களுக்கும் கடுமையான கட்டுப்பாடுகள்
விதிக்கப்படவுள்ளதாகவும்இ இது சிறுவர்களின் உளநலப் பிரச்சினைகளை
குறைக்கும் நோக்கில் மேற்கொள்ளப்படுவதாகவும் அவர் கூறியுள்ளார்.
இந்த நடவடிக்கை உலகளவில் இதுவரை முன்வைக்கப்பட்ட மிகக் கடுமையான
இணைய கட்டுப்பாடுகளில் ஒன்றாகக் கருதப்படுவதாக சர்வதேச ஊடகங்கள்
தெரிவித்துள்ளன.

