Wednesday, October 7, 2026
https://thaaitv.com/
Homeஇலங்கைதிருமலை சிறைச்சாலையின் உதவி அத்தியட்சகருக்கு விளக்கமறியல்

திருமலை சிறைச்சாலையின் உதவி அத்தியட்சகருக்கு விளக்கமறியல்

சிறைக் கைதிகளுக்கு உணவு வழங்குவதற்கான உலர் உணவுப் பொருட்களை
விநியோகிக்கும் ஒருவரிடமிருந்து 12, 35, 000 ரூபா இலஞ்சமாகப் பெற்றதாகக்
கூறப்படும் திருகோணமலை சிறைச்சாலையின் உதவி அத்தியட்சகரை
எதிர்வரும் 20ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க திருகோணமலை
நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

குறித்த சந்தேகநபர் இன்று (07) திருகோணமலை பிரதான நீதிவான் எம்.எஸ்.எம்.
சம்சுதீன் முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டதைத் தொடர்ந்து இந்த உத்தரவு
பிறப்பிக்கப்பட்டுள்ளது.

அத்துடன்,  சந்தேகநபரை கொழும்பு பிரதான நீதிவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தி,
எதிர்வரும் 28ஆம் திகதி அவருடன் தொடர்புடைய அறிக்கையை நீதிமன்றில்
சமர்ப்பிக்குமாறு திருகோணமலை பிரதான நீதிவான் சிறைச்சாலை அதிகாரிக்கு
உத்தரவிட்டுள்ளார்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments