Tuesday, August 11, 2026
https://thaaitv.com/
Homeஇலங்கைஉயர் நீதிமன்றத்தில் மஹிந்தானந்த மேன்முறையீடு

உயர் நீதிமன்றத்தில் மஹிந்தானந்த மேன்முறையீடு

20 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்ட முன்னாள் விளையாட்டுத்துறை
அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே அந்த தண்டனையை எதிர்த்து
உயர் நீதிமன்றத்தில் மேன்முறையீடு செய்துள்ளார்.

வழக்கறிஞர் சனத் விஜேவர்தன மூலம் தாக்கல் செய்யப்பட்ட இந்த மேன்முறையீடு,
உயர் நீதிமன்றத்தில் சமர்ப்பிப்பதற்காக கொழும்பு மேல் நீதிமன்றத்தில்
ஒப்படைக்கப்பட்டுள்ளது.

அரசாங்கத்திற்கு 53 மில்லியன் ரூபாய்க்கு மேல் இழப்பை ஏற்படுத்தியதாக
‘ஊழல்’ குற்றத்தின் கீழ் லஞ்ச ஒழிப்பு ஆணையத்தால் தாக்கல் செய்யப்பட்ட
வழக்கில் குற்றவாளி என நிரூபிக்கப்பட்டு அவருக்கு 20 ஆண்டுகள்
சிறைத்தண்டனை விதிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments