Tuesday, August 11, 2026
https://thaaitv.com/
Homeஇலங்கைபுத்தளம் - கொழும்பு பிரதான வீதியில் விபத்து: ஒருவர் ஸ்தலத்திலேயே உயிரிழப்பு

புத்தளம் – கொழும்பு பிரதான வீதியில் விபத்து: ஒருவர் ஸ்தலத்திலேயே உயிரிழப்பு

புத்தளம் – கொழும்பு பிரதான வீதியின் பௌத்த மத்திய நிலையத்திற்கு அருகில்
இன்று காலை இடம்பெற்ற விபத்தில் ஒருவர் ஸ்தலத்திலேயே உயிரிழந்துள்ளார்.

வவுனியாவிலிருந்து கொழும்பு நோக்கிச் சென்ற தனியார் பஸ் ஒன்று முன்னால்
சென்ற பஸ்ஸை முந்திச் செல்ல முற்பட்ட போது எதிர்திசையில் வந்த
மோட்டார் சைக்கிளுடன் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.

இதன்போது மோட்டார் சைக்கிளில் பயணித்தவர் ஸ்தலத்திலேயே
உயிரிழந்துள்ளார்.

இவ்வாறு உயிரிழந்தவர் புத்தளம் தில்லையடி பகுதியைச் சேர்ந்த 56 வயதுடையவர்
என பொலிஸார் தெரிவித்தனர்.

உயிரிழந்தவரின் சடலம் புத்தளம் ஆதார வைத்தியசாலையில் பிரேத அரையில்
வைக்கப்பட்டுள்ளதுடன் பஸ்ஸின் சாரதி பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments