Tuesday, August 11, 2026
https://thaaitv.com/
Homeஇலங்கைதையிட்டி விகாரைக்கு வந்தவர் கஞ்சாவுடன் சிக்கினார்

தையிட்டி விகாரைக்கு வந்தவர் கஞ்சாவுடன் சிக்கினார்

தையிட்டி விகாரைக்கு வழிபட வந்த பெரும்பான்மை இனத்தைச் சேர்ந்த ஒருவர்
கஞ்சாவுடன் நேற்று (09) இரவு கைது செய்யப்பட்டுள்ளார்.

தையிட்டி விகாரைக்கு வழிபட வந்த நபர் அங்கு சந்தேகத்துக்கிடமான முறையில்
நடமாடியதை பொலிஸார் அவதானித்தனர்.

அதன்பின்னர் அவரிடம் மேற்கொண்ட விசாரணையில் அவரிடம் கஞ்சா மீட்கப்பட்டது. அதனையடுத்து அவர் கைது செய்யப்பட்டார்.

கைது செய்யப்பட்ட சந்தேகநபரை நீதிமன்றில் முன்னிலைப்படுத்துவதற்கான
நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது என்று பலாலி பொலிஸார்
தெரிவித்துள்ளனர்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments