Monday, August 10, 2026
https://thaaitv.com/
Homeஇலங்கைபொது இடங்களில் யாசகம் பெறுபவர்கள் தொடர்பில் எடுக்கப்பட்ட தீர்மானம்

பொது இடங்களில் யாசகம் பெறுபவர்கள் தொடர்பில் எடுக்கப்பட்ட தீர்மானம்

பொது இடங்களில் யாசகம் பெறுபவர்களின் எண்ணிக்கையைக் கட்டுப்படுத்த
தீவிர நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாக வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன்
தெரிவித்தார்.

சிறுவர்களின் நலன்சார் செயற்பாடுகளில் பங்கேற்கும் சகல உத்தியோகத்தர்களுக்குமான ஆலோசனைக் கலந்துரையாடல் வடக்கு மாகாண சுகாதாரத் திணைக்களத்தின் கேட்போர் கூடத்தில் நடைபெற்றபோது, ஓய்வுபெற்ற நீதிபதி ஸ்ரீநிதி நந்தசேகரன் வளவாளராக பங்குபற்றி கருத்துத் தெரிவித்தார்.

இதன்போது,  வடக்கு மாகாணத்தில் யாசகம் பெறுபவர்களால் ஏற்படும்
பிரச்சினைகளையும்,  யாசகம் சார்ந்த சட்டங்களையும் மத்திய மாகாண ரீதியில்
அல்லாது சகலரும் ஒன்றிணைந்த சட்ட ஏற்பாட்டின் அடிப்படையில் மேற்கொள்ள
வேண்டும் என்று ஓய்வுபெற்ற நீதிபதி ஸ்ரீநிதி நந்தசேகரன் கோரினார்.

அதற்குப் பதிலளித்த ஆளுநர் வடக்கு மாகாணத்தில் பொது இடங்களில் யாசகம்
பெறுபவர்களைக் கட்டுப்படுத்த கடந்த காலங்களைப் போன்று தீவிரமான
நடவடிக்கை எடுக்கப்படும் எனவும்,  அதற்குரிய ஒழுங்குகள் மேற்கொள்ளப்படும்
எனவும் தெரிவித்தார்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments