யாழ்ப்பாணம் – தையிட்டி விகாரை அமைந்துள்ள தனியார் காணிகளுக்கு நட்ட ஈடு அல்லது மாற்றுக் காணிகளை வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக
கடற்றொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் தெரிவித்துள்ளார்.https://youtu.be/7KUUj8Bpr1s?si=X4wn0O9YN4U_DV_F
வலிகாமம் வடக்கு பிரதேச ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் கலந்துகொண்டு
கருத்துரைக்கும்போதே அமைச்சர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன், தையிட்டி விகாரை அமைந்துள்ள காணிகளை தவிர்த்து, அதனை சூழவுள்ள ஏனைய காணிகளை மாவட்ட செயலாளரிடம் கையளிக்க பணிக்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.
இதனை அடுத்து, மாவட்ட செயலாளர் பிரதேச செயலாளர் ஊடாக
உரிமையாளர்களுக்கான காணிகளை கையளிப்பார்.
விகாரை பிரச்சினையை நீண்டு செல்ல அனுமதிக்க முடியாது எனவும், அதனை ஒரு
மாத காலத்துக்குள் நிறைவுசெய்வதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாகவும்
கடற்றொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் தெரிவித்துள்ளார்.

