யாழ்.தென்மராட்சி வரணிப்பகுதியில் இன்று காலை விபத்துச் சம்பவம் ஒன்று
இடம்பெற்றுள்ளது.
சாவகச்சேரி பிரதேச சபைக்கு சொந்தமான கழிவகற்றும் பவுசர் வாகனத்துடன்
மோட்டார் சைக்கிள் மோதுண்டே குறித்த விபத்து இடம்பெற்றுள்ளது
வரணி வேம்பிராய் வீதியில் இயற்றாலைப் பகுதியில் இன்று காலை
இவ்விபத்து சம்பவித்துள்ளது
அதாவது வேம்பிராய் வீதியால் வரணிப் பகுதி நோக்கி பயணித்த கழிவகற்றும் பவுசர்
வாகனம் தும்புருவில் வீதியால் திரும்பிச் செல்ல முற்பட்ட வேளை பின்னால் வந்த
மோட்டார் சைக்கிள் குறித்த பவுசருடன் மோதுண்டு இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
குறித்த விபத்தில் மோட்டார் சைக்கிளில் பயணித்த இருவர் காயமடைந்த நிலையில்
சிகிச்சைக்காக சாவகச்சேரி ஆதார வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
அத்துடன் மோட்டார் சைக்கிள் சேதங்களுக்குள்ளாகியுள்ளது.
சம்பவம் தொடர்பான விசாரணைகளை கொடிகாமம் பொலிசார் முன்னெடுத்துள்ளனர்.

