Thursday, August 6, 2026
https://thaaitv.com/
Homeஇலங்கைகட்சியிலிருந்து அதிரடியாக நீக்கப்பட்ட ஐக்கிய மக்கள் சக்தி உறுப்பினர்கள் அறுவர்

கட்சியிலிருந்து அதிரடியாக நீக்கப்பட்ட ஐக்கிய மக்கள் சக்தி உறுப்பினர்கள் அறுவர்

தம்புள்ளை பிரதேச சபையில் ஐக்கிய மக்கள் சக்தியைப் பிரதிநிதித்துவப்படுத்தும்
உறுப்பினர்கள் அறுவர் கட்சி உறுப்புரிமையிலிருந்து நீக்கப்பட்டுள்ளனர்.

தம்புள்ளை பிரதேச சபையின் முதல்வர் மற்றும் உப தலைவரை நியமிப்பதில்
ஐக்கிய மக்கள் சக்தியின் முகாமைத்துவ குழு மற்றும் கட்சி செயற்குழுவின்
தீர்மானத்திற்கு அமைய செயற்படாத காரணத்தினால் தம்புள்ளை பிரதேச சபை
உறுப்பினர்களில் அறுவரின் கட்சி உறுப்புரிமை உடனடியாக இடைநிறுத்தப்பட்டுள்ளது.

அதனடிப்படையில்,  ஹேரத் முதியன்சலாகே சுசில் ஹேரத்,  அதிகாரநாயக்க
முதியன்சேலாகே பெனலபொடே கெதர அனில் இந்திரஜித் தசநாயக்க,
கரந்தகொல்ல வளவ்வே தனஞ்ச சம்பத் கரந்தகொல்ல,  அளுத் கெதர பிரிய ரஞ்சன குமார ரத்நாயக்க,  ஹேரத் முதியன்சலாகே குசுமா குமாரி,  கிரிஷாந்தி தில்ருக்ஷி பிரேமரத்ன ஆகியோரே இவ்வாறு கட்சி உறுப்புரிமையிலிருந்து நீக்கப்படுவதாக கட்சியின் பொதுச் செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார அறிவித்துள்ளார்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments