Tuesday, September 22, 2026
https://thaaitv.com/
Homeஇலங்கைதெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் அடுத்தடுத்து மோதிய வாகனங்கள்

தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் அடுத்தடுத்து மோதிய வாகனங்கள்

தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில்,  கலனிகம மற்றும் தொடங்கொட பகுதிகளுக்கு
இடையே இன்று (21) இடம்பெற்ற தொடர் வாகன விபத்தில் 10க்கும் மேற்பட்டோர்
காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகத்
தெரிவிக்கப்பட்டுள்ளது.

மத்தறையிலிருந்து கொழும்பு நோக்கிப் பயணித்த பேருந்தொன்று,  வேனுடன்
மோதியதைத் தொடர்ந்து இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

பாடசாலை மாணவர்களை ஏற்றிச் சென்ற பேருந்து ஒன்று வேனுடன் மோதிய நிலையில்,  அதன் பின்னால் பயணித்த பல வாகனங்களும் ஒன்றுடன் ஒன்று மோதியதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்த விபத்தில் இரண்டு பேருந்துகள் மற்றும் ஆறு கார்கள் உள்ளிட்ட பல வாகனங்கள் சேதமடைந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

விபத்தில் காயமடைந்த 10க்கும் மேற்பட்டோர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும்,  அவர்களின் நிலைமை தொடர்பான மேலதிக தகவல்கள் வெளியாகவில்லை.

விபத்து காரணமாக தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டதைத் தொடர்ந்து,  காலியிலிருந்து கொழும்பு நோக்கிப் பயணிக்கும்
வாகனங்கள் தொடங்கொட வெளியேறும் வழித்தடத்தின் ஊடாக
மாற்றுப்பாதையில் திருப்பிவிடப்பட்டிருந்தன.

சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து
வருகின்றனர்.

 

 

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments