நயினாதீவு ஸ்ரீ நாக பூஷணி அம்மன் ஆலயத்தின் வருடாந்த திருவிழா தொடர்பான
முன்னாயத்த கலந்துரையாடல், மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில்
யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் மருதலிங்கம் பிரதீபன் தலைமையில்
நேற்று நடைபெற்றது.
ஆலய திருவிழா தொடர்பில் யாழ்.மாவட்ட அரசாங்க அதிபர் தெரிவிக்கையில்,
நயினாதீவு ஸ்ரீ நாக பூஷணி அம்மன் ஆலய திருவிழா எதிர்வரும் ஜீன் 26 ஆம் திகதி
தொடக்கம் ஜூலை 11 ஆம் திகதி வரை நடைபெறவுள்ளது. அனைத்து பக்தர்களும்
சிறப்பான முறையில் எந்தவித இடையூறும் இல்லாமல் ஸ்ரீ நாக பூசணி அம்பாளை
தரிசிப்பதை உறுதிப்படுத்தும் வகையில் இந்த கலந்துரையாடல்
ஒழுங்குபடுத்தப்பட்டடுள்ளது.
அத்துடன், கடந்த வருட திருவிழா ஏற்பாடுகளில் கற்றுக் கொண்ட பாடத்தினை
அடிப்படையாகக் கொண்டு இம் முறையும் உயர் திருவிழாவினை மேலும் சிறப்பாக
நடைபெற அனைவரின் ஒத்துழைப்பினையும் வழங்க வேண்டும் எனத் தெரிவித்தார்.
கலந்துரையாடலில் முன்வைக்கப்பட்ட தீர்மானங்கள் வருமாறு,
நயினாதீவில் மூழ்கிய கடற்பாதையினால் ஏற்பட்டுள்ள கடற் போக்குவரத்துக்கு
ஏற்பட்டுள்ள இடையூறை தவிர்ப்பதற்காக ஒரு பகுதியை கடற்படையின்
ஒத்துழைப்புடன் அகற்றுவது, குடிநீர் தேவைப்பாடுகள் இபாதுகாப்பிற்கு தேவையான
பொலிஸ் உத்தியோகத்தர்கள், பக்த்தர்கள் அணிந்துவரும் நகைகளுக்கு அவர்களே
பொறுப்பு என அறக்காவலர் சபையால் முன்கூட்டியே அறிவித்தல் வழங்குவது,
வீதி புனரமைப்பு, சாரணர்களின் சேவைகள் ஊடாக போக்குவரத்து சேவைகள்.
பேருந்து போக்குவரத்து சேவை, படகு போக்குவரத்து ஒரு வழிக் கட்டணம் 80 ரூபா,
பொலிஸ் உத்தியோகத்தர்களின் நடமாடும் சேவை, யாசகம் பெறுவோர் மற்றும்
சிறுவர்கள் வியாபாரத்தில் ஈடுபடுத்துவதை கண்காணிக்கும் உத்தியோகத்தர்கள்,
குறிகட்டுவான் துறைமுகத்தின் உள்நுழைவு வரை வாகனங்கள் தரித்து நிற்பதனை
தடுப்பது, ஆலயத்திற்கு முன்பாகவுள்ள கடைகளை அவர்களின் வாழ்வாதாரம்
பாதிக்காத வகையில் வேறு பொருத்தமான இடத்தில் மாற்றுவது .
கல் மற்றும் மணல் என்பவற்றை எடுத்துச் செல்வது முற்றாக தடை, மதுபான
விற்பனையினை மதுவரித்திணைக்களம் நடமாடும் சேவை, அமுதசுரபி அன்னதான
சபையினால் மதிய உணவு இரவு உணவு வழங்கப்படும் ,மேலும்,வைத்திய சேவை,
சுகாதாரம், மின்சாரத் தேவை, அம்புலன்ஸ் சேவை, இலங்கை செஞ்சிலுவை மற்றும்
சென் ஜோன்ஸ் படையினர் சேவை உள்ளிட்ட விடயங்கள் விரிவாக
கலந்துரையாடப்பட்டன.
கலந்துரையாடலில் மேலதிக அரசாங்க அதிபர் (காணி) க. ஸ்ரீமோகனன்,
உதவி மாவட்டச் செயலாளர் செல்வி உ. தர்சினி, நாகபூஷணி அம்மன் ஆலய
அறங்காவலர் சபைத் தலைவர் பரமலிங்கம், வேலணை பிரதேச செயலாளர்
சிவகரன்இ சுகாதார வைத்திய அதிகாரிகள், இலங்கை போக்குவரத்து சபை
அதிகாரிகள், கடற்படை அதிகாரி, பொலிஸ் உத்தியோகத்தர்கள், பிரதேச சபை
செயலாளர், வீதி அபிவிருத்தி திணைக்கள அதிகாரிகள், வீதி அபிவிருத்தி
அதிகாரசபையின் அதிகாரிகள், மதுவரித் திணைக்கள அதிகாரிகள்,
துறைசார் திணைக்கள தலைவர்கள், மாவட்ட செயலக உத்தியோகத்தர்கள்
எனப் கலந்து கொண்டனர்.

