Friday, August 7, 2026
https://thaaitv.com/
Homeஇலங்கைகாரைநகர் பிரதேச சபையின் தவிசாளராக கி.கோவிந்தராசன் தெரிவு

காரைநகர் பிரதேச சபையின் தவிசாளராக கி.கோவிந்தராசன் தெரிவு

காரைநகர் பிரதேச சபையின் தவிசாளராக சுயேச்சை குழுவினை சேர்ந்த
கிருஷ்ணன் கோவிந்தராசன் தவிசாளராக தெரிவு செய்யப்பட்டார்.

காரைநகர் பிரதேச சபையின் உறுப்பினர்களை தெரிவு செய்வதற்கான கூட்டம்
வடமாகாண உள்ளூராட்சி உதவி ஆணையாளர் பாபு தேவ நந்தினி தலைமையில்
இடம்பெற்றது.

இதன் பொழுது சுயேட்சை குழு 2 ஆசனங்களையும்,  ஐக்கிய தேசிய கட்சி 2
ஆசனங்களையும்,  அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் 2 ஆசனங்களையும்,
தேசிய மக்கள் சக்தி 2 ஆசனங்களையும்,  தமிழ் மக்கள் கூட்டணி 2 ஆசனங்களையும்,  இலங்கை தமிழரசு கட்சி 1 ஆசனத்தையும் கொண்டிருந்த நிலையில் கிருஷ்ணன் கோவிந்தராசனின் பெயர் முன்மொழியபட்ட நிலையில் அவர்
ஏகமனதாக தெரிவு செய்யப்பட்டார்.

இதேவேளை உபதவிசாளராக தமிழ் மக்கள் கூட்டணியின் ஆண்டி ஐயா விஜயராசாவின் பெயர் முன்மொழியபட்ட நிலையில் மாற்று தெரிவுகளின்றி ஏகமனதாக முன்மொழியப்பட்ட நிலையில் தெரிவு இடம்பெற்றது.

இதேவேளை தமிழ் மக்கள் கூட்டணி , அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் , சுயேட்சை குழு என்பன சுழற்சி முறையில் ஆட்சியை அமைக்க இணக்தினை எட்டியுள்ளமை
குறிப்பிடத்தக்கது.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments