ஒழுங்கமைக்கப்பட்ட குற்றச் செயல்களுடன் தொடர்புடையவர்கள் எனக் கருதப்படும்
‘ஹரக் கட்டா’ என அழைக்கப்படும் நதுன் சிந்தக விக்கிரமரத்ன மற்றும்
‘கெஹெல்பத்தர பத்மே’ என அழைக்கப்படும் மந்தினு பத்மசிறி ஆகியோருக்கு
இடையே ஏற்பட்ட மோதல் தொடர்பில் சிறைச்சாலைகள் திணைக்களம்
விசேட விசாரணையை ஆரம்பித்துள்ளது.
வெலிசர சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள இருவரும் நேற்று (22) மாலை மோதலில் ஈடுபட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்போது காயமடைந்த ‘கெஹெல்பத்தர பத்மே’, மருத்துவ சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார்.
தற்போது அவர் வெலிசர சிறைச்சாலை மருத்துவமனையில் சிகிச்சை பெற்று
வருவதாக சிறைச்சாலைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இச்சம்பவம் தொடர்பில் விசாரணை நடத்துவதற்காக சிறைச்சாலை உதவி
அத்தியட்சகர் ஒருவர் நியமிக்கப்பட்டுள்ளதாகவும், மோதலுக்கான காரணம்
உள்ளிட்ட விடயங்கள் தொடர்பில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு
வருவதாகவும் திணைக்களம் தெரிவித்துள்ளது.

