Wednesday, June 24, 2026
https://thaaitv.com/
Homeஇலங்கைஊர்காவற்துறை தவிசாளராக அன்னராசா தெரிவு

ஊர்காவற்துறை தவிசாளராக அன்னராசா தெரிவு

ஊர்காவற்துறை பிரதேச சபையின் தவிசாளராக திருவுளசீட்டு மூலம்
அன்னலிங்கம் அன்னராசா தெரிவாகியுள்ளார்.

ஊர்காவற்றுறை பிரதேச சபை தவிசாளரை தெரிவு செய்வதற்கான விசேட அமர்வு
இன்றைய தினம் வடக்கு மாகாண உள்ளூராட்சி ஆணையாளர் தேவனந்தினி பாபு
தலைமையில் பிரதேச சபையின் சபா மண்டபத்தில் இடம்பெற்றது.

13 ஆசனங்களை கொண்ட பிரதேச சபையில்இ ஈழமக்கள் ஜனநாயக கட்சி
4 ஆசனங்களையும்,  அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் மற்றும் தேசிய மக்கள் சக்தி
ஆகியன தலா 03 ஆசனங்களையும் ,  இலங்கை தமிழ் அரசுக் கட்சி 2 ஆசனங்களையும் ,  ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணி ஒரு ஆசனத்தையும் பெற்றிருந்தது.

இந்நிலையில் இன்றைய தினம் நடைபெற்ற தவிசாளர் தெரிவில்
தமிழ் தேசிய பேரவையின் உறுப்பினர் அன்னராசா தவிசாளராகவும்,
உப தவிசாளராக செபஸ்தியான் பிள்ளை லெனின் ரஞ்சித்தும் தெரிவு
செய்யப்பட்டுள்ளனர்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments