ழந்தை சத்திர சிகிச்சை நிபுணரும் சிரேஷ்ட விரிவுரையாளருமான
வைத்தியர் பா.சயந்தன் எழுதிய குழந்தை சத்திர சிகிச்சை தொடர்பான
மூன்று நூல்கள் யாழ்ப்பாணத்தில் நேற்றையதினம் வெளியிட்டு வைக்கப்பட்டது.
யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் மருத்துவ பீடத்திற்கென யாழ். நகரில்
அமைக்கப்பட்ட மருத்துவப் பயிற்சி மற்றும் ஆராய்ச்சித் தொகுதி கட்டடத்தில்
நேற்று குறித்த நிகழ்வு நடைபெற்றது.
யாழ்ப்பாணப் பல்கலைக்கழக துணைவேந்தர் பேராசிரியர் சிவக்கொழுந்து
சிறீசற்குணராஜா பிரதம விருந்தினராகவும் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக
முன்னாள் துணைவேந்தர் பேராசிரியர் வசந்தி அரசரட்ணம் சிறப்பு விருந்தினராகவும்
கலந்துகொண்டு நூலை வெளியிட்டு வைத்தனர்.
யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மருத்துவ பீட பீடாதிபதி வைத்தியர் இ.சுரேந்திரகுமாரன், சத்திர சிகிச்சை நிபுணர் வைத்தியர் எஸ்.ரவிராஜ், குழந்தை சத்திர சிகிச்சை நிபுணர்களான வைத்தியர் சஞ்சய அபேயகுணசேகர மற்றும் பி.சஜீவன், மதத் தலைவர்கள், வைத்திய நிபுணர்கள், வைத்தியர்கள், மருத்துவ பீட மாணவர்கள் என பலரும் கலந்துகொண்டனர்

