Tuesday, August 11, 2026
https://thaaitv.com/
Homeஇலங்கைவெற்றியடைந்த பெண்களுக்கு யாழில் வழங்கப்பட்ட கௌரவம்

வெற்றியடைந்த பெண்களுக்கு யாழில் வழங்கப்பட்ட கௌரவம்

யாழ்ப்பாணம் மாவட்டத்தில் உள்ள உள்ளூராட்சி சபைகளில் போட்டியிட்டு
வெற்றிபெற்ற பெண்களுக்கான கௌரவிப்பு நிகழ்வு இன்று இடம்பெற்றது.

இன்று காலை யாழ்ப்பாணத்தில் உள்ள தனியார் விருந்தினர் விடுதி ஒன்றில்
யாழ் சமூக செயற்பாட்டு மையத்தில் ஏற்பாட்டில் குறித்த நிகழ்வு நடைபெற்றது.

இதன்போது யாழ்ப்பாணம் மாவட்டத்தில் போட்டியிட்டு வெற்றிபெற்ற 15 பெண்கள்
கௌரவிக்கப்பட்டனர்.

நிகழ்வில் வடக்கு மாகாண பிரதம செயலாளர் தனுஜா முருகேசன்,  யாழ்.பல்கலைக்கழக சட்டத்துறைத் தலைவர் கோசலை மதன்,  யாழ்.மாநகர சபை முதல்வர் மதிவதனி விவேகானந்தராசா,  வெற்றிபெற்ற உள்ளூராட்சி மன்ற பெண் உறுப்பினர்கள்,  சமூக செயற்பாட்டாளர்கள் என பலர் கலந்துகொண்டிருந்தனர்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments