Tuesday, August 11, 2026
https://thaaitv.com/
Homeஉலகம்சிரிய தேவாலயத்தில் தற்கொலை குண்டுவெடிப்பு

சிரிய தேவாலயத்தில் தற்கொலை குண்டுவெடிப்பு

சிரியாவின் தலைநகர் டமாஸ்கஸில் உள்ள தேவாலயத்தில் நடந்த தற்கொலை குண்டுவெடிப்பில் இதுவரையில் குறைந்தது 22 பேர் கொல்லப்பட்டதோடு 63 பேர் காயமடைந்துள்ளதாக அரச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

ட்வீலா சுற்றுப்புறத்தில் உள்ள மார் எலியாஸ் தேவாலயத்தில் நேற்று
வழிபாட்டிற்காக வழிபாட்டாளர்கள் கூடியிருந்தனர்.

தற்கொலை குண்டுதாரி உள்ளே நுழைந்து துப்பாக்கிச் சூடு நடத்தி, பின்னர் தனது
வெடிகுண்டை வெடிக்கச் செய்ததாக சிரியாவின் உள்துறை அமைச்சகம் ஒரு
அறிக்கையில் தெரிவித்துள்ளது.

தற்கொலை குண்டுதாரி இஸ்லாமிய அரசு அமைப்பைச் சேர்ந்தவர் என்றும்
இந்த தாக்குதலில் இரண்டு பேர் ஈடுபட்டதாகவும், அதில் தன்னைத்தானே
வெடிக்கச் செய்த நபரும் அடங்குவர் என்றும் அந்நாட்டு ஊடகங்கள்
தெரிவித்துள்ளன.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments