Sunday, July 5, 2026
https://thaaitv.com/
Homeஇலங்கையாழ். மாவட்ட அரச அதிபராக பிரதீபன் சம்பிரதாயபூர்வமாக பொறுப்பேற்பு

யாழ். மாவட்ட அரச அதிபராக பிரதீபன் சம்பிரதாயபூர்வமாக பொறுப்பேற்பு

யாழ்ப்பாணம் மாவட்ட அரச அதிபராக மருதலிங்கம் பிரதீபன் இன்றையதினம் (24)
சம்பிரதாயபூர்வமாக பொறுப்பேற்றுக்கொண்ட நிலையில் அவருக்கு சக ஊழியர்களால் சிறப்பு வரவேற்பும் அளிக்கப்பட்டது.

குறித்த பதவியேற்பு நிகழ்வு யாழ் மாவட்ட செயலகத்தில் மேலதிக மாவட்ட அரச அதிபர் ஸ்ரீமோகன் தலைமையில் மதத் தலைவர்கள், மாவட்ட செயலக ஊழியர்கள்,
பிரதேச சபையின் செயலர்கள், மற்றும் யாழ்ப்பாணம் மாவட்டத்தின் பல்துறைசார்
பொறுப்பு நிலை அதிகாரிகள் பிரசன்னத்துடன் நடைபெற்றது.

முன்பதாக மாவட்ட செயலகத்துக்கு தனது பாரியாருடன் வருகைதந்த மாவட்ட
செயலாளரைஇ மேலதிக மாவட்ட அரச அதிபர் ஸ்ரீமோகன் கைலாகு கொடுத்து
மாலை அணிவித்து வரவேற்றிருந்தார்.

அதைத்தொடர்ந்து சக ஊழியர்களால் வரவேற்கப்பட்ட அரச அதிபர் பிரதீபன்
மாவட்ட செயலரின் அதிகாரபூர்வ அலுவலகத்தில் கடமைகளை பொறுப்பேற்றிருந்தார்.

யாழ்ப்பாணம் மாவட்டத்தில் பல மாதங்களாக மாவட்ட அரச அதிபர் வெற்றிடம்
இருந்துவந்த நிலையில் பதில் அரச அதிபராக கடமையாற்றிவந்த ம.பிரதீபன்
சில தினங்களுக்கு முன்னர் யாழ் மாவட்டத்தின் அரச அதிபராக நியமிக்கப்பட்டிருந்தார்

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments