Tuesday, September 29, 2026
https://thaaitv.com/
Homeஇலங்கை6 நாட்களில் 36 ஆயிரம் சுற்றுலாப் பயணிகள் இலங்கை வருகை

6 நாட்களில் 36 ஆயிரம் சுற்றுலாப் பயணிகள் இலங்கை வருகை

2025 ஜூலை மாதத்தின் முதல் ஆறு நாட்களில் (ஜூலை 1 முதல் 6 வரை) 36, 002
சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு வருகை தந்துள்ளதாக இலங்கை
சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது.

இதன்படி,  இந்த ஆண்டு இதுவரை இலங்கைக்கு வருகை தந்த மொத்த
சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை 1, 204, 046 ஆக உள்ளது.

கடந்த 2024 ஆம் ஆண்டில்,  12 இலட்சத்திற்கும் மேற்பட்ட சுற்றுலாப் பயணிகள்
ஓகஸ்ட் மாதத்தில் பதிவாகியிருந்தனர்.

இந்த ஆண்டு,  முந்தைய ஆண்டை விட வேகமாக சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை உயர்ந்து வருவது சுற்றுலாத் துறையில் மீட்சியை பிரதிபலிக்கிறது.

ஜூலை மாதத்தின் முதல் ஆறு நாட்களில் அதிக எண்ணிக்கையிலான சுற்றுலாப்
பயணிகள் இந்தியாவிலிருந்து வருகை தந்துள்ளனர்.

இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை வெளியிட்ட தரவுகளின்படி,
இந்தியாவிலிருந்து 8, 053 சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு வருகை தந்துள்ளனர்.

இதனைத் தொடர்ந்து,  ஐக்கிய இராச்சியத்திலிருந்து 3, 562 பேர், அவுஸ்திரேலியாவிலிருந்து 2, 674 பேர்,  மற்றும் சீனாவிலிருந்து 2, 362 பேர் இலங்கைக்கு வந்துள்ளனர்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments