Wednesday, May 6, 2026
https://thaaitv.com/
Homeஇலங்கைஅமெரிக்காவுடன் ஜனாதிபதி இணையவழி கலந்துரையாடல்

அமெரிக்காவுடன் ஜனாதிபதி இணையவழி கலந்துரையாடல்

இலங்கை ஏற்றுமதிக்கு அமெரிக்கா விதித்துள்ள தீர்வை வரிகளை குறைப்பது தொடர்பில் ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்கவிற்கும் அமெரிக்காவின் வர்த்தக முகவர் அலுவலகத்தின் தூதுவர் ஜேமிசன் கிரியருக்கும் (Jamieson Greer) இடையிலான இணையவழி கலந்துரையாடல் இடம்பெற்றது.

இக் கலந்துரையாடலின் முதன்மை நோக்கமானது இலங்கை மீது விதிக்கப்பட்டுள்ள தீர்வை வரிகளை குறைப்பதும் மற்றும் இரு நாடுகளுக்கும் இடையிலான வர்த்தக மற்றும் முதலீட்டு உறவுகளை மேம்படுத்துவதுமாகும்.

இந்த கலந்துரையாடலில் நிதி அமைச்சின் செயலாளர் ஹர்ஷன சூரியப்பெரும மற்றும் அமெரிக்க வர்த்தக முகவர் அலுவலக (USTR) அதிகாரிகளும் கலந்துகொண்டனர்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments