Thursday, May 7, 2026
https://thaaitv.com/
Homeஇலங்கைபொரளை கோர விபத்து :கஞ்சா பாவனையில் கிரேன் சாரதி

பொரளை கோர விபத்து :கஞ்சா பாவனையில் கிரேன் சாரதி

பொரளை,  கனத்தை சந்தியில் இன்று (28) காலை ஏற்பட்ட விபத்து தொடர்பாக கைது செய்யப்பட்ட கிரேன் லொறியின் சாரதி கஞ்சா உட்கொண்டிருப்பது உறுதி
செய்யப்பட்டுள்ளது.

சம்பந்தப்பட்ட நபரிடம் மேற்கொள்ளப்பட்ட மருத்துவ பரிசோதனையின் போது
இது தெரியவந்தது.

பொரளை கனத்த சந்தியில் இன்று (28) காலை ஏற்பட்ட விபத்தில் காயமடைந்த
ஏழு பேர் தற்போது கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று
வருகின்றனர்.

விபத்தில் காயமடைந்தவர்களில் ஒருவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்படும்போதே உயிரிழந்ததாக கொழும்பு தேசிய வைத்தியசாலையின் பிரதிப் பணிப்பாளர் வைத்தியர் ருக்ஷான் பெல்லனா தெரிவித்தார்.

காயமடைந்தவர்களில் இருவர் பெண்கள் என்றும், மீதமுள்ள ஐந்து பேர் ஆண்கள் என்றும் மருத்துவர் கூறினார்.

இன்று காலை, ராஜகிரியவிலிருந்து பௌத்தலோக மாவத்தை நோக்கிச் சென்ற கிரேன் லொறி ஒன்று,  கனத்தை சுற்றுவட்டத்தில் உள்ள போக்குவரத்து சமிக்ஞைகளுக்கு அருகில் நிறுத்தப்பட்டிருந்த 6 மோட்டார் சைக்கிள்கள் மற்றும் 3 கார்களுடன் மோதி விபத்தினை ஏற்படுத்தியது.

விபத்தில் உயிரிழந்தவர் அத்துருகிரிய பகுதியைச் சேர்ந்த 62 வயதுடையவர் என
அடையாளம் காணப்பட்டுள்ளார்.

விபத்துக்கு காரணமான கிரேன் லொறியின் சாரதி கைது செய்யப்பட்டுள்ளார்.

 

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments