2011 இல் காணாமல் ஆக்கப்பட்ட இரண்டு மனித உரிமை ஆர்வலர்களான லலித் குமார் வீரராஜூ மற்றும் குகன் முருகானந்தன் தொடர்பாக யாழ்ப்பாணம் நீதவான் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கில் சாட்சியமளிக்க தயாராக இருப்பதாக முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ இன்று(30) உயர் நீதிமன்றத்தில் தெரிவித்தார்.
இந்த விவகாரம் தொடர்பில் மேன்முறையீட்டு மனு இன்று உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்த போது, கோட்டாபய ராஜபக்ஷ தரப்பில் சட்டப்பூர்வமாக ஆஜரான ஜனாதிபதி வழக்கறிஞர் ரோமேஷ் டி சில்வா இந்த தகவலை நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளார்.

