Saturday, June 27, 2026
https://thaaitv.com/
Homeஇலங்கைபௌத்த பிக்கு நாக விகாரையில் சடலமாக மீட்பு

பௌத்த பிக்கு நாக விகாரையில் சடலமாக மீட்பு

யாழ்ப்பாணத்திற்கு சுற்றுலா வந்த பிக்கு ஒருவர் நேற்றையதினம் சடலமாக
மீட்கப்பட்டுள்ளார்.

பதுளை வீதி,  பசற பகுதியைச் சேர்ந்த வனபதுலே சரணஹர தேரர் என்பவரே
இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

குறித்த பிக்கு கடந்த சில தினங்களுக்கு முன்னர் சுற்றுலா பயணத்தை மேற்கொண்டு
யாழ்ப்பாணம் வந்திருந்த நிலையில் நேற்றுமுன்தினம் சில இடங்களை சுற்றிப்பார்த்த
பின்னர் நாகவிகாரைக்கு சென்று அங்கு இரவு உறக்கத்திற்கு சென்றுள்ளார்.

இந்நிலையில் நேற்றையதினம் அவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

சடலம் மீதான மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி நமசிவாயம் பிறேம்குமார் மேற்கொண்டார்.

உடற்கூற்று பரிசோதனைகளுக்காக சடலம் யாழ்ப்பாணம் போதனா
வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments