தேசபந்து தென்னகோனை பொலிஸ்மாஅதிபர் பதவியில் இருந்து நீக்கும் பிரேரணை
மீதான விவாதம் பாராளுமன்றத்தில் சற்று முன் ஆரம்பமாகியுள்ளது.
2002 ஆம் ஆண்டு 5 ஆம் இலக்க அதிகாரிகளை நீக்குதல் (நடைமுறை) சட்டத்தின் பிரிவு 17 இன் கீழ், முன்னாள் பொலிஸ்மா அதிபர் தேசபந்து தென்னகோனை பதவியில் இருந்து நீக்குவதற்கான தீர்மானத்தின் மீதான விவாதம் ஆரம்பமாகியுள்ளது.
இந்தத் தீர்மானத்தை சபாநாயகர் ஜகத் விக்ரமரத்ன முன்மொழிந்தார்.

