Thursday, July 2, 2026
https://thaaitv.com/
Homeஇலங்கைஇரவோடு இரவாக மன்னாரில்நடந்த சம்பவம்

இரவோடு இரவாக மன்னாரில்நடந்த சம்பவம்

மன்னாரில் மக்களின் கடுமையான எதிர்ப்பிற்கு மத்தியில்,  நூற்றுக்கணக்கான
பொலிஸாரின் பாதுகாப்புடன் காற்றாலை மின் உற்பத்திக்கான கோபுர பாகங்கள்
இன்று அதிகாலை 2.30 மணியளவில் மன்னார் நகருக்கு கொண்டு வரப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

மன்னார்-மதவாச்சி பிரதான வீதியில் முருங்கன் பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த காற்றாலை பாகங்களை,  மக்கள் எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டிருந்த போதும்,  பொலிஸாரின் கடும் பாதுகாப்புடன் நகருக்குள் எடுத்துச் செல்லப்பட்டுள்ளது.

முன்னதாக,  கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு மன்னார் தள்ளாடி சந்தியில் மக்கள்,
குறித்த பாகங்களை நகருக்குள் எடுத்து வரக் கூடாது என்ற கோரிக்கையை முன்வைத்து போராட்டத்தை முன்னெடுத்தனர்.

தொடர்ச்சியாக திங்கள் மற்றும் செவ்வாய்க்கிழமைகளிலும் மன்னார் பிரஜைகள் குழுவின் ஏற்பாட்டில் போராட்டங்கள் தொடரப்பட்டன. இதனைத் தொடர்ந்து நேற்றைய தினம் மன்னார் பஜார் பகுதியில் உள்ள பல வர்த்தக நிலையங்கள் மூடப்பட்டன.

இதேநிலையில்,  இன்று அதிகாலை மக்கள் கண்காணிப்பு போராட்டத்தில்
ஈடுபட்டிருந்தபோதும், பொலிஸாரின் கடும் பாதுகாப்புடன்,  காற்றாலை பாகங்களை
ஏற்றிய வாகனங்கள் நகருக்குள் உள்நுழைந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பொலிஸார் அவ்விடத்தில் நின்றவர்களை அச்சுறுத்தி பலத்த பாதுகாப்புடன் மன்னாரை நோக்கி குறித்த வாகனம் சென்றுள்ளது.

இச்சம்பவம் அப்பகுதி மக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியையும்,  அச்சத்தையும்
ஏற்படுத்தியுள்ளது.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments