Sunday, June 28, 2026
https://thaaitv.com/
Homeஇலங்கைசட்டவிரோத திஸ்ஸ விகாரைக்கு எதிராக போராட்டம்

சட்டவிரோத திஸ்ஸ விகாரைக்கு எதிராக போராட்டம்

யாழ்ப்பாணம் – வலிகாமம் தையிட்டியில் அமைந்துள்ள சட்டவிரோத திஸ்ஸ விகாரைக்கு எதிராக இன்றும் போராட்டம் இடம்பெற்று வருகின்றது.

சட்டவிரோத முறையில் அமைக்கப்பட்டுள்ள தையிட்டி திஸ்ஸ விகாரையை அகற்றுமாறு கோரி தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியினர்,  மக்களுடன் இணைந்து தொடர்ச்சியாக போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

அதன் தொடர்ச்சியாக பௌர்ணமி தினமான இன்றையதினமும் குறித்த போராட்டமானது முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

குறித்த போராட்டத்தில் பாராளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம்,
தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் பொதுச் செயலாளர் செல்வராஜா கஜேந்திரன்,
போராளிகள் குடும்ப நல காப்பக தலைவர் தீபன்,  தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் செயற்பாட்டாளர்கள் மற்றும் பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments